இஸ்ரேல்-ஈரான் நேரடி மோதல் தீவிரம் – அரக் அணு உலைக்கு தாக்குதல், இஸ்ரேலிய மருத்துவமனை சேதம்

இஸ்ரேல்-ஈரான் நேரடி மோதல் தீவிரம் – அரக் அணு உலைக்கு தாக்குதல், இஸ்ரேலிய மருத்துவமனை சேதம்

இஸ்ரேலும் ஈரானும் தொடர்ந்து ஏழாவது நாளாக ஒருவரையொருவர் தாக்கும் நிலையில், இரு நாடுகளும் கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன.

ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேலில் பல இடங்களை தாக்கி, தெற்கு பெர்சேபா நகரில் உள்ள சொரோகா மருத்துவமனை பாதிக்கப்பட்டது.

இம்மருத்துவமனையில் பரந்தளவான சேதம் ஏற்பட்டதாகவும், அவசரசிகிச்சை தவிர மற்ற சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ள நிலையில், நால்வர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

ஈரான் தெரிவித்ததாவது, இவர்களின் இலக்கு இஸ்ரேலின் ராணுவ உளவுத்துறை தலைமையகம் என்றும், அது மருத்துவமனையுடன் இணைந்துள்ளதாலும் ஏற்பட்ட அதிர்வே மருத்துவமனைக்கு சிறிய சேதத்தை ஏற்படுத்தியதாகவும் கூறியது. ஆனால் இஸ்ரேலிய அரசு இதை ஓர் போர் குற்றமாகக் கண்டித்து, ஈரான் இது தொடர்பாக கடுமையான விலையைச் செலுத்த வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பதிலாக, இஸ்ரேலின் போர் விமானங்கள் ஈரானில் உள்ள அரக் கனிம நீர் அணு உலை மீது தாக்குதல் நடத்தின.

தற்போது “Khondab” என அழைக்கப்படும் இந்த உலை, புளூட்டோனியம் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் முக்கியமான கருவியின் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு முன்னர் அந்த பகுதி வெறிச்சோடிக்கப்பட்டதாகவும், கதிரியக்க பாதிப்பு எதுவும் இல்லை என்றும் ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய நிலவரப்படி, ஈரான் சுமார் 400 ஏவுகணைகள் மற்றும் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஏவியுள்ளது.

இஸ்ரேலில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றொரு பக்கத்தில், ஈரானில் கடந்த வாரம் நடந்த விமானத் தாக்குதல்களில் 639 பேர் உயிரிழந்துள்ளதோடு, 263 பேர் பொதுமக்களாவர் என்பது மனித உரிமை அமைப்புகளின் தெரிவிப்பு ஆகும்.

இருநாடுகளுக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து, பொதுமக்கள் வாழ்விற்கு நேரான ஆபத்தை ஏற்படுத்தி வருவதால், சர்வதேச சமூகத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

Recommended For You

About the Author: admin