ரஜவக்க பாடசாலை அரச மரம் சரிந்து விபத்து: ஒரு மாணவர் பலி, பலர் காயம்; விசாரணை ஆரம்பம்

ரஜவக்க தேசியப் பாடசாலையில் ஏற்பட்ட துயர சம்பவத்தில், பாடசாலை வளாகத்தில் இருந்த ஒரு அரச மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒரு மாணவர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் மதுர சேனவிரத்ன பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டு, ஒரு வாரத்திற்குள் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்களைத் தடுக்கும் வகையில், பாடசாலை வளாகங்களில் உள்ள பாதுகாப்பற்ற மரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்குமாறு அதிபர்களையும் அவர் வலியுறுத்தினார்.

இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த சப்ரகமுவ மாகாண கல்வி திணைக்களத்தினால் மூன்று பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஆறு மாணவர்கள் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நஷ்ட ஈடு சுரக்க்ஷா காப்புறுதித் திட்டம் மூலம் வழங்கப்படவுள்ளது.

Recommended For You

About the Author: admin