உள்ளுர் விமான சேவையை விருத்தி செய்யும் நோக்கில் கொழும்பு – யாழ் விமான சேவை

அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கமைவாக உள்ளூர் விமான சேவையை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பீரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

இதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதிப்பவர்களின் மேற்பார்வையின் கீழ் விசேட கண்காணிப்பு விமான பயணத்தினை இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வரை நேற்று (02)

மேற்கொண்டுள்ளது.

குறித்த விமானமானது நேற்று பி.ப 1.05 மணியளவில் யாழ்ப்பாணம் – பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

Recommended For You

About the Author: admin