தொடர்ந்தும் மூன்றாவது முறை அக்கரைப்பற்றின் இரு சபைகளிலும் தேசிய காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்கின்றது.
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அக்கரைப்பற்றில் அமோக வெற்றியீட்டிய தேசிய காங்கிரஸ் உத்தியோக பூர்வமாக மாநகர மற்றும் பிரதேச சபையில் இன்று ஆட்சியமைத்தது.
இதன் போது தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரவை அந்தஸ்துள்ள பல அமைச்சுக்களை வகித்து,
இன, மத, பேதங்கள் கடந்து நாடு முழுவதும் சேவையாற்றி வடக்கையும் கிழக்கையும் பிரித்த,
அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் கௌரவ மாநகர முதல்வராக பதவிப்பிரமாணம் மேற்கொண்டார்கள்.
இதனைத் தொடர்ந்து அக்கரைப்பற்று உட்பட ஏனைய பிரதேசங்களில் சபைக்குத் தெரிவாகிய கௌரவ உறுப்பினர்கள் அனைவரும் தலைவர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் மேற்கொண்டார்கள்.
இந் நிகழ்வுகள் யாவும் அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கத்தில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

