இறுதி போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் மோதல்.. புதிய அணிகள் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு
இரண்டு மாதத்திற்கு மேலாக ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தற்போது கிளைமாக்ஸ் வந்தடைந்து விட்டது. 70 லீக் சுற்று மற்றும் 3 பிளே ஆப் போட்டிகளை கடந்து தற்போது இறுதிப் போட்டியில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.
இந்த போட்டி வரும் ஜூன் மூன்றாம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக ஐந்து முறை கோப்பையை வென்றிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக கே கே ஆர் மூன்று முறையும், சன்ரைசர்ஸ், டெக்கான் சார்ஜஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.
இதுவரை டெல்லி, பஞ்சாப், ஆர் சி பி போன்ற அணிகள் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. பொதுவாக ஐபிஎல் போட்டியில் ஏற்கனவே கோப்பையை வாங்கிய அணிகள் ஒன்றாவது இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். அந்த வகையில் இம்முறை ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இறுதிப் போட்டிக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், குவாலிபயர் 2வில் மும்பை அணி தோல்வியை தழுவியது.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் கோப்பையை வாங்காத புதிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதில் ஆர்சிபி வெற்றி பெற்றாலும், பஞ்சாப் அணி வெற்றி பெற்றாலும் ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக வென்ற அணி என்ற சாதனையை உருவாக்கும். அந்த வகையில் 18 ஆண்டுகளாக விராட் கோலி, ஆர் சி பி அணிக்காக கடுமையாக போராடி வருகிறார்.
இதுவரை மூன்று முறை அந்த அணி இறுதிப் போட்டிக்கு சென்று தோல்வியை தழுவிய நிலையில், தற்போது நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி விட வேண்டும் என்ற உத்வேகத்தில் களமிறங்கி இருக்கிறது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை 11 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது.
ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது முறையாக பைனலுக்கு வந்திருக்கிறார்கள். மேலும் ஸ்ரேயாஸ், டெல்லி கொல்கத்தா மற்றும் பஞ்சாப் என மூன்று அணிகளின் கேப்டனாக செயல்பட்டு ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தனது அணியை தகுதி பெற வைத்திருக்கிறார். இதில் கொல்கத்தா அணியின் சாம்பியன் பட்டத்தை ஸ்ரேயாஸ் வென்ற நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பு தற்போது அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
மூன்றாம் தேதியும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ரிசர்வ் டேவாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடப்பு சீசனில் மூன்று முறை பஞ்சாப்பும், ஆர்சிபியும் மோதி இருக்கிறது. இதில் ஒரு முறை பஞ்சாப் அணியும், இரண்டு முறை rcb அணியும் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

