ட்ரோன் தாக்குதல் – மொஸ்கோவின் விமான நிலையங்கள் மூடப்பட்டன

மொஸ்கோவை குறிவைத்து உக்ரைன் தொடர்ந்து இரண்டாவது இரவாக ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மொஸ்கோவின் நான்கு முக்கிய விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வெவ்வேறு திசைகளில் இருந்து வந்த 19 உக்ரேனிய ஆளில்லா விமானங்கள், நகரத்தை அடைவதற்கு முன்பே அழிக்கப்பட்டதாக மொஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார்.

நகரத்திற்குள் நுழையும் ஒரு பிரதான நெடுஞ்சாலையில் அவற்றின் சில பாகங்கள் விழுந்ததாகவும், ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் மேயர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த விஷயத்தில் உக்ரைன் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில், ஒரே இரவில் 26 உக்ரேனிய ஆளில்லா விமானங்களை அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin