இந்த ஆண்டில் 17,459 டெங்கு நோயாளர்கள் பதிவு

2025ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிகளில் நாட்டில் 17,459 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 5,018 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர், வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் டெங்கு நோயினால் 6 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 5,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், பெரும்பாலான டெங்கு நோயாளர்கள் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல் மற்றும் வாந்தி, தோலில் சிவப்பு நிற கொப்புளங்கள் மற்றும் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin