
முதல்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட விலங்கு கணக்கெடுப்பை முழுமையானதாகவும் துல்லியமாவும் கருத முடியாததால் அரசாங்கம் மற்றொரு விலங்கு கணக்கெடுப்பை நடத்த எதிர்பார்க்கிறது என விவசாய அமைச்சர் கே.டி.லால் காந்த தெரிவித்துள்ளார்.
உலகில் பெரும்பாலான நாடுகள் விலங்கு கணக்கெடுப்பை நடத்திய பிறகு விலங்கு மேலாண்மை திட்டங்களை மேற்கொள்கின்றன. அதனை எமது அரசாங்கமும் செய்ய எதிர்பார்க்கிறது.
கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குப் பேசிய அவர், ”அவுஸ்திரேலியாவில் துல்லியமான விலங்கு தொகை கணக்கெடுப்புக்குப் பின்னர் கங்காருக்கள் மீது விலங்கு மேலாண்மையை மேற்கொள்கின்றனர்.
இலங்கை ஒருபோதும் விலங்கு கணக்கெடுப்பை மேற்கொள்ளவில்லை. சமீபத்தில் நடத்தப்பட்ட மக்கள் விலங்கு கணக்கெடுப்பையும் முற்றிலும் துல்லியமானதாக கருத முடியாது.
விலங்கு கணக்கெடுப்பு முடிந்த பின்னர் குரங்குகள் போன்ற விலங்குகள் மீதான மேலாண்மை திட்டத்தை மேற்கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கிறது.” என்றும் அவர் கூறியுள்ளார்.