முல்லைத்தீவில் மரதடிகள் கடத்தல் முயற்சி முறியடிப்பு!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குளத்திற்கு பின்பாகவுள்ள காட்டு பகுதியில் மரதடி கடத்தல் முயற்சி புதுக்குடியிருப்பு பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

உடையார்கட்டு காட்டுப்பகுதியில் நேற்று (09.04.2025) இரவு மரதடிகள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட நடவடிக்கையில் 1700ற்கு மேற்பட்ட காயா மரத்தடிகள் வெட்டப்பட்டு ஏற்றுவதற்கு தயாராக காணப்பட்டது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களின் வருகையையடுத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இந்நிலையில் மரக் குற்றிகளை பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றி சென்றிருந்தனர். இது குறித்த மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Recommended For You

About the Author: admin