தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவை

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவையை நடத்த இலங்கை போக்குவரத்து சபை திட்டமிட்டுள்ளது.

இதன்படி, 500 மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக, போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இந்த திட்டம் அமுல்படுத்தப்படுவதுடன், மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்கு வசதியாக ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை விசேட பஸ் சேவை முன்னெடுக்கப்படும்.

Recommended For You

About the Author: admin