தேஷபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களை கைது செய்ய உத்தரவு! 

முன்னாள் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உட்பட 06 சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2023 டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை, வெலிகம பலேன பகுதியில் உள்ள W 15 ஹோட்டலுக்கு முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

6314/23 என்ற வழக்கு எண்ணின் கீழ் நடைபெறும் சட்ட நடவடிக்கையின்படி, கொலைக்கு சதி செய்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் பதில் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன், கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி அன்ஸ்லம் டி சில்வா உட்பட 06 சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: ROHINI ROHINI