
கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு வழக்கறிஞர் வேடத்தில் துப்பாக்கியை கொண்டு வந்து கொடுத்து விட்டு , தற்போது தலைமறைவாக உள்ள பெண்ணின் தாய் மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
23 மற்றும் 48 வயதுடைய அவர்களிடம் விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது.
பிம்புர தேவகே சமிது திவங்க வீரசிங்க வயது – 23, முகவரி – கட்டுவெல்லேகம, நீர்கொழும்பு. கொலை பற்றி தெரிந்தும் அது தொடர்பான தகவல்களை மறைத்து குற்றத்திற்கு உதவி செய்தல்.
சேசத்புர தேவகே சமந்தி வயது – 48, முகவரி – கட்டுவெல்லேகம, நீர்கொழும்பு. கொலை பற்றி தெரிந்தும் அது தொடர்பான தகவல்களை மறைத்து குற்றத்திற்கு உதவி செய்தல்.
அதன்படி, இந்த குற்றம் தொடர்பாக இதுவரை 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் அறிவுறுத்தலின் பேரில் கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.