அதானியுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் முடிந்தது- நலிந்த ஜெயதிஸ்ஸ.

இந்தியாவின் அதானியுடன் செய்துகொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் பணிகள் தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ கொழும்பில் தெரிவித்தார்.

அதானி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் மூலம் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு கோரிய தொகை அதிக மதிப்பைக் கொண்டிருந்ததால் பணிகள் முடிவடைந்ததாகவும், அதைவிட குறைந்த விலையில் மின்சாரம் வழங்க மற்றொரு நிறுவனம் விருப்பம் தெரிவித்ததாகவும் அமைச்சர் கூறினார்.

“வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பது, தேசிய தேவைகளுக்கு ஏற்ப நமது நாட்டு மக்களுக்கு நியாயமான விலையில் அந்த சேவைகளை வழங்க முடியுமா என்பதுதான். எங்கள் அரசாங்கம் பதவியேற்ற பிறகு, திட்டங்களை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை அல்ல, இந்த மின்சார விலைகளை குறைப்பதுதான் தேவையாக உள்ளது.

அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்கள் வெளியேற இது ஒரு முக்கிய காரணம். அதைவிட குறைந்த விலையில் மின்சாரம் வழங்க மற்றொரு நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த அரசாங்கம் வந்த பிறகு ஒரு முதலீட்டாளர் வெளியேறினார் என்று சிலர் குற்றம் சாட்ட முயற்சிக்கிறார்கள். இது ஒரு முதலீட்டாளர் வெளியேறியது அல்ல. மேலும் முதலீட்டாளர்கள் வருகிறார்கள் என்பதே உண்மையான காரணமாகும்.”

Recommended For You

About the Author: ROHINI ROHINI