
இந்திய கிரிக்கெட் சபை ஆண்டுதோறும் சிறந்த இந்திய வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த வாரம் BCCI இன் நாமன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
17 வருடங்கள் கழித்து ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி T20 உலகக் கிண்ணத்தை வென்றதற்கு BCCI சார்பில் சிறப்பு ‘சாம்பியன்ஸ் மோதிரம்’ வழங்கப்பட்டது.
T20 உலகக் கிண்ண தொடரில் இடம் பெற்ற ஒவ்வொரு வீரரின் பெயரும் அவர்களது ஜெர்சி நம்பரும் பொறிக்கப்பட்ட வைரம் பதித்த மோதிரத்தை BCCI வழங்கியது.