![](https://yarlvasal.lk/wp-content/uploads/2025/02/FB_IMG_1738798678731-800x490.jpg)
அர்ச்சுனா எம்.பி ஒரு மனநோயாளி!; வைத்தியசாலைக்கு அனுப்புமாறு கோரிய தயாசிறி
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஒரு மனநோயாளி என்றும், அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்றைய தினம் பாராளுமன்றில் உரையாற்றும் போது, இலங்கை பொலிஸார், பாராளுமன்றம் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோரை அவமதிக்கும் வகையில் கடுமையாக உரையாற்றியிருந்தார்.
இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டதுடன், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சனங்களை வெளியிட்டனர்.
இதன்போது, எழுந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு உரையாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், சபையைப் பார்த்தும், சபாநாயகரைப் பார்த்தும் இவ்வாறு உரையாற்றுவதை இந்த சபை எப்படி அனுமதிக்கின்றது என்றும், இங்கு பாகுபாடு இல்லை என்றும் கடும் தொனியில் பேசினார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு தலையில் பிரச்சினை என்றும் தயாசிறி சுட்டிக்காட்டினார்.
அர்ச்சுனா எம்.பிக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவேண்டியது அவசியம் என்றும் இதன்போது சபையில் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.
இதேவேளை, சிறிது நேரத்தின் பின்னர் மீண்டும் சபைக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர், அர்ச்சுனா “மூளை குழம்பிய தயாசிறி ஜயசேகர மற்றும் அவரால் மூளை குழப்பப்பட்ட பிமல் ரத்நாயக்க ஆகியோர் நான் உரையாற்ற வேண்டிய நேரத்தில் அவர்கள் இருவரும் அடிபட்டுக் கொண்டார்களே தவிர எனக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை” என மீண்டும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலை இன்று முதல் அதிகரிப்பு
இன்று (05) முதல், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உணவுக்காக 2,000 ரூபாய் பணத்தை செலுத்த வேண்டும்.
பாராளுமன்றத்தில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு இந்த மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்தாலும், இந்த மாதத்திற்கான பாராளுமன்றம் அமர்வு இன்று கூடியதால், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உணவுக்கான குறித்த கட்டணத்தை செலுத்த வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவிற்காக நாளாந்தம் வசூலிக்கப்படும் பணம் 2,000 ரூபாவாக உயர்த்துவதற்கு பாராளுமன்ற சபை குழுவில் கடந்த 23 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, பாராளுமன்ற உணவகத்தில் காலை உணவின் விலை ரூ.600 ஆகவும், மதிய உணவு ரூ.1,200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு கோப்பை தேநீரின் விலை 200 ரூபாய். இந்த புதிய விலைகள் பெப்ரவரி 1ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.