யாழில் 104 கி.கி கேரளா கஞ்சாவுடன் 3 பேர் கைது
– இரகசிய தகவலின் அடிப்படையில் நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் 104 கி.கி கேரளா கஞ்சாவுடன் மூவர் பொலிஸாரினால் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து இரண்டு படகுகளில், யாழ்ப்பாணம் உதயபுரம் கடற்கரை பகுதிக்கு கஞ்சா போதைப்பொருள் கடத்தி வருவதாக மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த பகுதியில் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்காணிப்பை மேற்கொண்டிருந்தனர்.
அதன்போது , இரண்டு படகுகளில் கஞ்சாவை கடத்தி வந்த உதயபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்களை பொலிஸார் கைது செய்ததுடன் , அவர்களிடம் இருந்து 104 கிலோ கஞ்சா போதைப்பொருளை மீட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.