சுங்கப் பரிசோதனையின்றி கொள்கலன்கள் விடுவிப்பு? நிதியமைச்சினால் விசாரணை குழு

சுங்கப் பரிசோதனையின்றி கொள்கலன்கள் விடுவிப்பு? நிதியமைச்சினால் விசாரணை குழு

சுங்கப் பரிசோதனையின்றி இறக்குமதி கொள்கலன்களை விடுவித்துள்ளதாக வௌியான தகவல் தொடர்பான விசாரணைகளுக்காக நிதியமைச்சினால் குழு​வொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

திறைசேரியின் பிரதி செயலாளர் A.K.செனவிரத்ன தலைமையில், போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் S.B.ஜயசுந்தர, வர்த்தகம் மற்றும் முதலீட்டு கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் K.P.குமார, முகாமைத்துவ கணக்காய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் A.P.குரும்பலப்பிட்டிய, சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளர் சபுமல் ஜயசுந்தர ஆகியோர் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin