விபத்தில் சிக்கிய ஜனாதிபதி பாதுகாப்பு டிபென்டர் – 4 பேர் காயம்

தலாவ பகுதியில் இன்று(01) அதிகாலை ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிபென்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை குறித்த பாதுகாப்பு டிபெண்டர் ரக வாகனம் வீதியை விட்டு விலகி அருகிலிருந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை மோசமாக உள்ளதால், அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
விபத்து குறித்து தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin