வடக்கில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசம்
கடவுச் சீட்டு பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் யாழ் மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று (31) நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
அதற்கான அலுவலகம் அமைப்பது தொடர்பில் மாவட்ட செயலாளருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

