வாடகைக்கு அமர்த்தப்பட்ட ரயிலிலேயே மசாஜ்: விசாரணைகளை ஆரம்பித்தது ரயில்வே திணைக்களம்!

வாடகைக்கு அமர்த்தப்பட்ட ரயிலிலேயே மசாஜ்: விசாரணைகளை ஆரம்பித்தது ரயில்வே திணைக்களம்!

பிலிமத்தலாவையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் கடந்த 15ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மசாஜ் நடவடிக்கை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வழக்கமான பயணிகள் ரயிலில் அல்லாமல், தனியார் நிறுவனத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட ரயிலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆனால், இது ரயில்வே திணைக்கள விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் ரயில்வே துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இச்சம்பவத்தில் இருந்து ரயில்வே திணைக்களத்துக்கு ஏற்பட்ட நட்டத்தை மீளப் பெற்று இது தொடர்பான சட்டத்தை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களம் மேலும் கூறுகிறது.

Recommended For You

About the Author: admin