குருணாகல் மாவட்டம் வெல்லவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முத்தெட்டுகல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (16) இரவு ரயிலில் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் குருணாகல் ,தோரயாய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய வயோதிபர் ஆவார்.
இவர் கொழும்பு கேட்டையிலிருந்து கணேவத்தை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.