நுளம்புக்குப் புகை மூட்டிய மூதாட்டி உயிரிழப்பு!

நுளம்புக்குப் புகை மூட்டிய சமயம் சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ். கரவெட்டி மேற்கு – கவுடாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சண்முகம் பொன்னம்மா (வயது 81) என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.

தனிமையில் வசித்து வந்த அவர் நுளம்புக்குப் பொச்சு மட்டையில் தீ வைத்தபோது அவரது சேலையில் தீ பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

Recommended For You

About the Author: admin