முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 20 கி.மீ தூரத்திற்க்குள் மாறி மாறி தொடர்ச்சியாக சேவையாற்றி வரும் சுமார் 500 ஆசிரியர்களால் யாழ் மாவட்டத்தில் இருந்து அங்கு சேவைக்குச்செல்லும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டுள்ளார்கள்.
குறித்த விடையம் தொடர்பில் யாழ் மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சென்ற பல நூறு ஆசிரியர்கள் வருடங்களாக இடமாற்றம் இன்றி அங்கேயே தங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கல்வி வலயத்தில் மட்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்ப்ட்ட திகதியில் 66 பாடசாலைகளில் 512 ஆசிரியர்கள் முல்லைத்தீவு வலயத்தின் 20 கி.மீ க்கு உள்ளேயே மாறி மாறி சேவையில் உள்ளமை வெளிச்சாத்துக்கு வந்துள்ளது.
இதன் காரணமாக யாழ்பாணத்தில் இருந்து வெளிமாவட்ட சேவைக்கு முல்லைத்தீவு செல்லும் ஆசிரியர்கள் சுமார் 150 கி.மீ வரை பிரயாணம் செய்யவேண்டிய துர்பாக்கிய நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.
உதாரணமாக விசுவமடு, புதுக்குடியிருப்பு வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தி அப்பிரதேசக்களை சேர்ந்த ஆசிரியர்களை முல்லைத்தீவு நகருக்கு அப்பால் உள்ள பாடசாலைகளுக்கு பரம்பல் செய்வதன் மூலம் ஆசிரியர்களின் பிரயாண சுமையை குறைக்க முடியும்.
இருப்பினும் குறித்த பிரதேச ஆசிரியர்களின் அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கு காரணமாக 20 கி.மீ உட்பட்ட பாடசாலைகளில் பணிக்கு அனுமதித்து யாழில் இருந்து முல்லைத்தீவின் பிரதேச பெயர்கள் கூட அறியாத ஆசிரியர்கள் தூர பிரதேசங்களில் பணிக்கமர்த்தப்பட்டனர்.
குறித்த விடையம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வெளிமாவட்டம் செல்லாது ஒரே மாவட்டத்தில் பல வருடங்களாக தங்கியிருப்போரை இடமாற்றம் செய்ய் நடவடிக்கை எடுக்க வேண்டும்.