சபையில் உரையாற்ற இன்னமும் எனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை;

குழு நியமித்தும் முடிவில்லை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சபாநாயகருக்கு கடிதம்

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், தனது நாடாளுமன்ற உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து சபாநாயகருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அக் கடிதத்தில், நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரத்தை பெறமுடியாமல் இருப்பது குறித்த தனது கரிசனையை வெளியிட்டுள்ள அர்ச்சுனா எம்பி, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற அடிப்படையில் எனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு இந்த உரிமை மிகவும் அவசியமானது என வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் அலுவலகம் அறிவித்ததைப்போன்று இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள போதிலும், இதற்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதனை, சரி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை சபாநாயகர் எடுக்கவேண்டும் எனவும், இல்லாவிடின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற அமர்வுகளிலிருந்து வெளிநடப்பு செய்ய தீர்மானித்துள்ளதாகவும்ந நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: admin