சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சித் திட்டம்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான போதைப் பொருள் தடுப்பு நிகழ்ச்சித் திட்டம் 2025.01.10 இன்று இடம்பெற்றது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே . மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய அபாயகர ஒளடதங்கள் அதிகார சபையின் வட கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான உளவள ஆலோசனை துறை இணைப்பாளர் எம்.எம்.ஜீ.வி.ரஸாத் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.

இந்த நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

போதைப்பொருள் பாவனைக்கு சமூகத்தில் அடிமையாகின்றவர்களின் மூலம் பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதாகவும் இதனை ஒழித்து கட்டுவதில் மிகப்பெரிய பங்கு சுகாதாரத் துறையில் உள்ள குடும்ப நல உத்தியோகத்தர்கள் கொண்டுள்ளனர் எனவும் இதன்போது வளவாளர் தெரிவித்தார்.

வீடுகளில் உள்ள தாய்மார்கள் மற்றும் பாதிக்கப்படுகின்ற பெண்களிடம் மிகவும் நெருக்கமான உறவை கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளக்கூடிய ஒரு தரப்பு சுகாதாரத் துறையில் உள்ளவர்கள் ஆகும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் இணைப்பாளர்களாக சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களான ரீ.எல். றிஸ்வானா, எஸ்.எப். றியானா, எஸ். விஜயலதா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்

Recommended For You

About the Author: admin