ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவை நியமித்துள்ளார்.
இதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால், மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவுக்கு இன்று (10) வழங்கப்பட்டது.