வட்சப் பயனர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு

வட்ஸ்அப்(Whstsapp) செயலியில் புதிய மேம்படுத்தல்(Update)செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பயனர்களால் ஒவ்வொரு நாளும் வட்ஸ்அப் மூலம் 2 பில்லியனுக்கும் அதிகமான அழைப்புகள் செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கணிணி மற்றும் கையடக்கத் தொலைபேசிகளின் மூலம் புதிய அழைப்பு வசதிகளை அறிமுகப்படுத்த இந்த நிறுவனம் முடிவு செய்துள்ள்ளது.

புதிய மேம்படுத்தல்கள் மேலும், குறித்த தொடர்புடைய குழுவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அழைப்புகளைச் செய்ய முடிவதுடன், வீடியோ அழைப்புகளில் சில வேடிக்கையான அம்சங்களைச் சேர்ப்பது போன்றவை காணப்படுகின்றது.

அத்துடன் டெஸ்க்டாப் வழியாக அழைப்புகளைச் சேர்ப்பது, அழைப்பைத் தொடங்க, அழைப்பு இணைப்பை உருவாக்க அல்லது அழைப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்த மேம்படுத்தப்பட்ட வட்ஸ்அப் மூலம் நேரடியாக எண்ணைப் பெறலாம்.

மேலும், இதன் மூலம் தொலைபேசி அல்லது கணிணியிலிருந்து பெறப்படும் வட்ஸ்அப் அழைப்புகளின் சிறந்த தரத்தை அதன் பயனர்களுக்கு வழங்க முடியும் என்று நிறுவனம் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin