நாளைய தினம் உருவாகவுள்ள தாழமுக்கம்!

நாளைய தினம் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நாளை (07.01.2025) காற்று சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இந்த தாளமுக்கமானது 08.01.2025 முதல் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக எதிர்வரும் 08.01.2025 முதல் 12.01.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அத்தோடு இந்த மழை 12 ம் திகதியைத் தாண்டியும் தொடரும் வாய்ப்புள்ளது. ஏனெனில் எதிர்வரும் 12.01 2025 அன்று மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி ஒன்று தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளது ( அடுத்த சில நாட்களின் பின்னரே இதனை உறுதிப்படுத்த முடியும்).

எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயிகள் மேற்குறிப்பிட்ட நாட்களைக் கருத்தில் கொண்டு தமது நெல், உழுந்து மற்றும் பயறு போன்ற அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது.

எதிர்வரும் 09.01.2025 முதல் 12.01.2025 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். எனவே மீனவர்கள் இந்நாட்களில் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: admin