மொட்டுக் கட்சி ஆட்சியில் இல்லாததன் அருமையை, மக்கள் உணர்கிறார்கள்!

ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி படுதோல்வியடைந்து விட்டது, அதற்கு இனி எதிர்காலம் இல்லை என்று எவரும் கனவு காணக்கூடாது.

எமது கட்சி விரைவில் மீண்டெழும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,
“மொட்டுக் கட்சியை எவராலும் சிதைக்க முடியாது. அது மீண்டெழும். எதிர்வரும் தேர்தல்களில் எமது கட்சி பலத்தைக் காட்டும்.

பொய் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

மொட்டுக் கட்சி தற்போது ஆட்சியில் இல்லாததன் அருமையை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். எமது கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். மக்கள் நிம்மதியாக வாழும் சூலை ஏற்படுத்துவோம்” என கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin