தாய்நாடு தற்போது எதிர்நோக்கி வரும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அனைவரும் துணிச்சலுடனும், வலிமையுடனும், தொலைநோக்குப் பார்வையுடனும் உழைக்க உறுதியேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தைப் போன்று குறுகிய இன மற்றும் மதக் கருத்தியல்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் அரசியல் வேலைத்திட்டங்கள் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிடுகிறார்.
அத்துடன், கடந்த 4 வருடங்களில் நாட்டு மக்கள் எதிர்நோக்கிய நிச்சயமற்ற நிலை மற்றும் விரக்திக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களுக்குச் சாதகமான பொருளாதார, அரசியல், சமூகச் சூழலை உருவாக்குவதே தமது விருப்பம் என எதிர்க்கட்சித் தலைவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.