தென்மராட்சி மீசாலை வேம்பிராய் பகுதியில், குடிமனைக்குள் புகுந்த வெங்கணாந்தி இனத்தைச் சேர்ந்த மலைப் பாம்பு ஒன்றை பிரதேச மக்கள் உயிருடன் பிடித்துள்ளனர்.
8 அடி நீளமான இந்த பாம்பு கடந்த 27 ஆம் திகதி இரவு வீட்டு வளாகத்துக்குள் புகுந்துள்ளது.
குட்டி வெங்கணாந்தி இன மலைப்பாம்பை பிடித்த அப் பகுதி மக்கள் உரிய தரப்பினரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.