மஸ்கெலியாவில் பார ஊர்தி குடை சாய்ந்து விபத்து..!

நல்லதண்ணி – மஸ்கெலியா பிரதான வீதியின் மஸ்கெலியா – பிரவுன்லோ தோட்டப் பகுதியில் கெப் வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்று மீண்டும் கொடகவெல பகுதி நோக்கி பயணித்த குறித்த கெப் வாகனத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பயணித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin