இதுவரை கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டிடத்தின் 3வது மாடியில் இயங்கி வந்த ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகம் 2025 ஜனவரி 01 ஆம் திகதி முதல் புதிய இடத்தில் நிறுவப்பட உள்ளது.
இதன்படி, ஜனாதிபதி நிதியத்தின் புதிய அலுவலக வளாகம் கொழும்பு 01, ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக அமைந்துள்ள ஸ்டேண்டர்ட் சார்டர்ட் கட்டிடத்தின் தரைத்தளத்தில் நிறுவப்படுகிறது.
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வரும் பொதுமக்கள்,2025 ஜனவரி 1 முதல்,
கொழும்பு 01, ஜனாதிபதி மாவத்தை, ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக அமைந்துள்ள ஸ்டேண்டர்ட் சார்டர்ட் கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள அலுவலக வளாகத்திற்குச் சென்று சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
– ஜனாதிபதி ஊடகப் பிரிவு-