அஸர்பைஜான் விமான விபத்துக்கு காரணம் ரஷ்யாவின் தாக்குதல் – மன்னிப்பு கேட்டார் புடின்

அஸர்பைஜான் விமானம் விபத்துக்குள்ளானமை தொடர்பில், அந்தநாட்டு ஜனாதிபதிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் மன்னிப்பு கேட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்து தொடர்பில் கிரம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸர்பைஜான் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று ரஷ்யாவின் க்ரோஸ்னி நோக்கிப் பயணித்த போது கடந்த 26 ஆம் திகதி விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், உக்ரைன் இடையிலான போரில், ரஷ்ய வான்படைகள் தவறுதலாக இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என செய்திகள் பரவின. இதற்கு, ரஷ்யா எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், விமான விபத்து குறித்து அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவிடம், ரஷ்ய அதிபர் புடின் வருத்தம் தெரிவித்ததாக, ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளதாவது:

ரஷ்ய வான்வெளியில் நடந்த துயர சம்பவத்திற்கு, அசர்பைஜான் அதிபரிடம், விளாடிமிர் புடின் மன்னிப்பு கோரினார்.

Recommended For You

About the Author: admin