திருகோணமலை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான நிலையில் ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு கரைக்கு இழுத்து கொண்டுவரப்பட்டுள்ளது.
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த ஆளில்லா விமானம் படகில் கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்று (26) அதிகாலை 4.00மணியளவில் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக சென்றிருந்த நிலையில் கடலில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் குறித்த விமானத்தினை தாம் அவதானித்ததாகவும் அதனைத்தொடர்ந்து அதனை தனது படகில் கட்டி கரைக்கு இழுத்து வந்ததாகவும் குறித்த மீனவர் தெரிவித்தார்.
சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான குறித்த ஆளில்லா விமானம் மோட்டாரின் மூலம் இயக்கப்படும் ஒன்றாக காணப்படுவதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.