முதலை கடித்து பெண் ஒருவர் பலி
உளுக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவகுளம் பகுதியில், முதலை கடித்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுக்குடுமனை, சுடுவேந்திரபிலவ் பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய பெண்ணே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கால்நடைகளை அழைத்துச் சென்றபோது, வாவியொன்றிலிருந்த முதலை, அப்பெண்ணைக் கடித்துள்ளது தெரியவந்தது.