நாமல் ராஜபக்‌ஷவின் சட்டத்தரணி பட்டத்தை கேள்விக்கு உட்படுத்தி சிஐடியில் முறைப்பாடு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ சட்டப் பரீட்சைக்கு தோற்றியமையை கேள்விக்கு உடபடுத்தி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான குடியுரிமை அமைப்பின் தலைவர் கமந்த துஷார இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.
முறைப்பாட்டைச் சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், நாமல் ராஜபக்க்ஷ பொய்யாக சட்டப் பட்டம் பெற்றமைக்கான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.
நாமல் ராஜபக்க்ஷ சட்டப் பரீட்சைக்குத் தோற்றிய விதம் தொடர்பில் முறைப்பாடுகளைச் சமர்ப்பித்த போதிலும், இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Recommended For You

About the Author: admin