சபாநாயகர் அசோக சபுமல் ரண்வல பாராளுமன்றத்தில் முன்வைத்ததாகக் கூறப்படும் போலியான கல்வித் தகைமை தொடர்பில் சமூக எதிர்ப்பு காரணமாக சபாநாயகர் அசோக சபுமல் ரண்வல தனது பதவியை இராஜினாமா செய்தமை பாராட்டத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந் மேலும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் சமூகமயப்படுத்தப்பட்ட கல்வித் தகுதியை நிரூபிக்கத் தவறினால் உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Xல் ஒரு பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் நாடாளுமன்றத்தை நடத்தும் தத்துவத்திற்கு எதிராக, அதே கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்வித் தகைமை தொடர்பில் மக்களை தவறாக வழிநடத்துவது மிகவும் வருத்தமளிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.