கல்முனையில் கட்டாக்காலி மாடுகள், நாய்கள் நடமாடுவதனால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் !
அம்பாறை கல்முனையில் அதிகளவான கட்டாக்காலி மாடுகள், நாய்கள் வீதிகளில் நடமாடுவதனால் அவ் வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை பெரிய நீலாவணை மருதமுனை பாண்டிருப்பு சாய்ந்தமருது மற்றும் நகரப்பகுதிகளில் அதிகளவான கட்டாக்காலி மாடுகள், நாய்கள் வீதிகளில் நடமாடுவதனால் வீதி விபத்துக்களும் இடம்பெறுவதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்.
மாலை நேரப் பொழுதில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவதனால் இரவுவேளைகளில் வீதி விளக்குகள் போதியளவில் இல்லாத ஓர் துர்ப்பாக்கிய நிலையும் இங்கு காணப்படுகின்றது. சமூகநலன் கருதி மாநகர சபை மற்றும் உரிய அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.