உணவின் தரத்தை பரிசோதிப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு பரிசோதனையையும் இலங்கையால் மேற்கொள்ள முடியவில்லை என பேராசிரியர் கமல் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தலசீமியா மற்றும் சிறுநீரக நோயின் தாக்கம் இந்நாட்டிலும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் 15-17 வயதுக்கு இடைப்பட்ட 100 பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட பரிசோதனையின் போது தலசீமியா 23.9% ஆகவும் குருநாகலில் 20.6% ஆகவும் காணப்பட்டதாக பேராசிரியர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.