14 வயது சிறுமி கொலை…கழிப்பறைக் குழியில் வீசப்பட்ட சடலம்

14 வயது சிறுமியொருவர் கொலை செய்யப்பட்டு கழிவறைக் குழியில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்பஹா, அகரவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த திங்கட்கிழமை (02) முதல் தனது 14 வயது மகளை காணவில்லை என நேற்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்றிரவு நடத்திய விசாரணையில் கொலைக்கான அடிப்படை காரணத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இக் கொலையில் தனது இரண்டாவது கணவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த பெண்ணின் இரண்டாவது கணவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கூறிய தகவலின்படி, சந்தேக நபர் சிறுமியை கொலை செய்து, புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டின் பின்புறத்திலுள்ள கழிப்பறையில் சடலத்தை வைத்து கொங்க்ரீட் பலகையால் மூடியிருப்பது தெரிய வந்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin