காட்டு விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்கள் தொடர்பில் விவசாயிகள் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம்- லால் காந்தா

காட்டு விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்கள் தொடர்பில் விவசாயிகள் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம்..- லால் காந்தா

வனவிலங்குகளினால் தமது வயல்களில் ஏற்படும் பயிர்ச் சேதங்கள் தொடர்பில் விவசாயிகள் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியும் என விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.

வன விலங்குகளால் குறிப்பாக குரங்குகளால் பயிர் சேதம் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளதாகவும் வன விலங்குகளால் ஏற்படும் சேதம் விவசாயிகளுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் பிரச்சனையாக மாறியுள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

விவசாயிகள் தங்கள் வயல்களில் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக எந்த சட்டப் பிரச்சினையும் இல்லை என்றார்.

“முடிந்தால் எந்த நடவடிக்கையும் எடுங்கள்,” என்று அவர் கூறினார்.

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பை அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அது விரைவில் தீர்க்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: ROHINI ROHINI