கொட்டும் மழைக்கு மத்தியில் வடக்கு கிழக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

தாயகத்திற்காக போராடி வீரச்சாவடைந்த உறவுகளை உணர்வெழுச்சியுடன் நினைவுகூறும் வகையில் வடக்கு கிழக்கில் இன்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

கொட்டும் கடும் மழைக்கு மத்தியிலும், இயற்கை சீற்றத்தையும் பொருட்படுத்தாது இன்று மாலை தமிழர் தாயகப்பகுதியில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

வீதிகளிலும், மாவீரர் துயிலும் இல்லங்களிலும் சிப்பு, மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டு மாவீரர் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், மாவீரர்களுக்கு சுடர் ஏற்றப்பட்டு, கண்ணீரால் உறவினர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என ஒன்றுகூடி மாவீரர் தினத்தை அனுஷ்டித்திருந்தனர்.

கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வு பூர்வமாக ஒன்று திரண்டு தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.

மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் பிரதான பொதுச் சுடரை ஒரு மாவீரரின் தாய் ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

2

3

அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில்

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் இடைவிடாத கொட்டும் மழையிலும் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இமடபெற்றிருந்தது.

மாலை 06.05மணிக்கு மணி ஓசை எழுப்பப்பட்டு, தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதையடுத்து மாவீரர்களுக்கான பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

அத்துடன், சமநேரத்தில் ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டதுடன், மாவீரர்களின் உறவுகள் கண்ணீர்சொரிந்து உணர்வெழுச்சியுடன் நினைவேந்தலை மேற்கொண்டனர்.

-9

hyrr

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில்

யாழ்ப்பாணம் – கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றிருந்தது.

இதன்போது அகவணக்கத்தைத் தொடர்ந்து ஈகைச் சுடரை மூன்று மாவீர்ர்களின் தந்தையான கந்தசாமி ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்களால் பொதுச்சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படட்டது.

re

yry

குடத்தனை வடக்கில் மாவீரர் நினைவேந்தல்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனையிலும் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் முதல் நிகழ்வாக சிவப்பு மஞ்சள் கொடி ஏற்றப்பட்டது. கொடியினை மாவீரர் றதிகலாவின் தந்தை கனகரத்தினம் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து பொதுச் சுடரினை வீரவேங்கை தொழில் வாயினின்றும் தாயார் இராசசுந்தரம் சின்னக்கிளி ஏற்றிவைத்தார்.

ureu

சாட்டி துயிலும் இல்லத்தில்

யாழ் தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாலை 06.05 மணி ஒலி எழுப்பப்பட்டு ஒரு கரும்புலி மாவீரர் உட்பட மூன்று மாவீரர்களின் பெற்றோரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்களால் சுடர்களை ஏற்றப்பட்டு மாவீரர்கள் நினைவு கூரப்பட்டனர்.

அதனைதொடர்ந்து நினைவு கற்களுக்கு மலர்மாலை அணியப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

fdshd

kf

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில்

மாவீரர் தினத்தையொட்டி மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவு தினம் இன்று (27) மாலை நினைவுகூரப்பட்டுள்ளது.

ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழு வினால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

hr

Orjtjt

Recommended For You

About the Author: admin