யாழ். திருநெல்வேலியில் வீதிக்கு குறுக்கே விழுந்த மலை வேம்பு

யாழ். திருநெல்வேலி சந்தியிலிருந்து கோண்டாவில் செல்லும் பாதையில் வீதியோரத்தில் நின்ற மலை வேம்பு மரம் ஒன்று வேரேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக நேற்றைய தினம் (26.11.2024) வேரோடு சரிந்துள்ளது

மக்கள் அசௌகரிகம்

இதனால் குறித்த பாதையூடாக பயணத்தை செய்யும் மக்கள் மிகவும் அசௌகரியங்களை
எதிர்நோக்கினர்.

பின்னர் ஊர் மக்கள் ஒன்றிணைந்து அந்த மரத்தினை வெட்டி அகற்றிய பின்னர்
போக்குவரத்து சீராகியது.

பாடசாலைகளை மூடுமாறு கோரிக்கை இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் (Jaffna) கல்வி வலயத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளை தற்காலிகமாக மூடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் அமைந்துள்ள யாழ். ஒஸ்மானியா கல்லூரி மற்றும் யாழ். கதீஜா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி இன்றும் (27.11.2024) நாளை (28.11.2024) தற்காலிகமாக மூடுமாறு அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் யாழ். வலயக் கல்விப் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: admin