ஐபிஎல் மெகா ஏலத்தில் சரித்திரம் படைத்த ரிஷப் பண்ட்!

இந்திய விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ரிஷப் பண்ட் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த வீரராக ஆனார்.
சவுதி அரேபியாவின் ஜித்தாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)) அணிக்காக அவர் 27 கோடி இந்திய ரூபாவுக்கு ஏலம் போயுள்ளார்.
ரிஷப் பண்டுக்கு அடுத்தபடியாக பஞ்சாப் கிங்ஸ் ஸ்ரேயஸ் ஐயரை 26.75 கோடி இந்திய ரூபாவுக்கு வாங்கியது.
நடப்பு ஏலத்தில் பண்ட் மிகவும் விலையுயர்ந்த வீரராக மாறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, ஸ்ரேயஸ் ஐயர் கடந்த ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸால் 24.75 கோடிக்கு வாங்கப்பட்ட அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் முந்தைய சாதனையை முறியடித்தார்.
எவ்வாறெனினும் 27 கோடி ரூபாவுக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக வாங்கப்பட்ட ரிஷப் பண்ட், இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த வீரராக ஆனார்.

Recommended For You

About the Author: admin