தனி நாடு கோரி வரும் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பினரே காலிஸ்தான் பிரிவினைவாதிகள்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இவ் அமைப்பு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறிருக்க அயோத்தியில் உள்ள ராமர் கோயில் மற்றும் இதர இந்துக் கோயில்கள் மீது எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
“16,17 ஆம் திகதிகளில் இந்துக் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். அயோத்தியில் வன்முறை வெடிக்கும். இந்துத்துவ சித்தாந்தத்தின் பிறப்பிடமாக விளங்கும் அயோத்தி ராமர் கோயிலை தகர்ப்போம்.
அதேபோல் கனடா, மிசிசவுகாவிலுள்ள காளிபரி கோயிலில் 16 ஆம் திகதியும் ப்ராம்ப்டனில் உள்ள திரிவேணி கோயிலில் 17 ஆம் திகதியும் இந்திய தூதரக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவோம்.
கனடாவில் வசிக்கும் பல இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோடியின் சித்தாந்தத்தை பின்பற்றுகின்றனர். கனடா நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர ஆர்யா கனடாவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் அல்லது உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.