இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்புகள் காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது.
நாடளாவிய ரீதியில் 13,421 தேர்தல் மத்திய நிலையங்களில் மக்கள் வாக்கெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மாலை 4.00 மணியுடன் வாக்களிக்கும் நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அத்துடன் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் 29 போனஸ் ஆசனங்கள் அதாவது தேசியப் பட்டியல் பகிர்ந்தளிக்கப்படும்.
தபால் மூல வாக்களிப்பு எண்ணும் பணி மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும் என்றும் முதல் தேர்தல் முடிவுகள் இரவு 10.00 மணிக்கு வெளியாகும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.