தமிழ் மக்களுக்கு தேவையானதை அநுர அரசு அதனை ஏற்காது

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கணிசமான மக்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடனும் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பதிலும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

மாற்றத்தை பற்றி பலர் சொல்கின்றனர். அனுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றதை வைத்து இதனை பலர் கூறுகின்றனர். மாக்ஸிஸ லெனினிச கொள்கைகளை பேசும் ஒருவர் ஆட்சியில் ஏறியமை மாற்றம் தான்.

ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. அதிகார பரவலாக்கம் தேவை என்ற விடயங்களை அனுர குமார திஸாநாயக்க தரப்பு ஏற்பதாக தெரியவில்லை.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அனுர குமார திஸாநாயக்க தற்போது அதை திருத்தி பயன்படுததலாம் என தற்போது சொல்கின்றனர்.

தமிழ் மக்கள் இம்முறை சிந்தித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை பலப்படுத்த வேண்டும்.

சங்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 2,3 ஆசனங்கள் கிடைக்கும் – என்றார்.

Recommended For You

About the Author: admin