உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: நல்ல செய்தி வெளியாகும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்னும் சில தினங்களில் நல்ல செய்தி வெளியாகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி தம்புள்ளையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்நாட்டில் சாதாரண மக்களை கொலை செய்த அனைத்து குற்றவாளிகளையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும் சாதாரண மக்களுக்கு நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

அரசியல்வாதிகள் எப்பொழுதும் தமது உயிர் மாத்திரமே சிறப்பானது என்றும் சாதாரண மக்களின் உயிர்கள் மதிப்பற்றது என்றும் எவ்வாறெல்லாம் எண்ணுகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டிய ஜனாதிபதி, இந்தக் கொலைகளுக்கு இந்த மனநிலையே முதன்மையான காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.

தாஜுதீனின் கொலைக்கு காரணமானவர்கள் எவரும் இல்லை, லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்ட விதம் இன்னும் தெரியவில்லை, எக்னெலிகொடவுக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது என வலியுறுத்திய ஜனாதிபதி, இந்தக் குற்றங்கள் அனைத்தையும் தான் ஆராய்ந்து வருவதாகவும் வலியுறுத்தினார். அந்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

” ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்வோம் அதனை நினைவில் கொள்ளுங்கள். யாரும் கவலைப்பட வேண்டாம். நாளை அல்லது நாளை மறுநாள் அதைப் பற்றி உங்களுக்கு ஓரிரு நல்ல செய்திகள் கிடைக்கும் “ என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin