நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், பிரச்சார நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது.
தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அமைதி காலத்தில் நடந்து கொள்ளுமாறு அனைத்து வேட்பாளர்களிடமும் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் நாளைய தினத்துக்குள் தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் அகற்றப்பட வேண்டுமென ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் ஒரு தொகுதியில் ஒரு தேர்தல் அலுவலகத்தை மாத்திரமே வைத்திருக்க முடியும்.
அமைதியான காலக்கட்டத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன்
தேர்தல் விதிமுறைகளை மீறப்படுமாயின் அமைச்சுப் பதவியை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள் கிடைக்கப்பெறாத மக்கள் தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.